எங்களை பற்றி

திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டத்திற்கு அருகில் உள்ளது ஆதரவற்றோர் மறுவாழ்வு காப்பகம்.

முதியோர்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு பொழுதும் அன்றைய பொழுது யாராவது உணவு தருவார் என்ற நம்பிக்கையில்
விடிகிறது.

இதன் நிர்வாகி 23 வயதே நிரம்பிய கண்ணன் எனும் இளைஞர். இவரது தந்தை ஒரு பார்வையற்றவர். அவரது லட்சியம் ஒரு மாற்றுத்திறனாளிகள் இல்லம் அமைப்பதாகும். தன் தந்தை கிருஷ்ணன் அவர்கள் இறந்த பின் கண்ணனும் அவரது தாயாரும் இணைந்து அவரது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணி ஊண் உறக்கமில்லாது பாடுபட்டு இந்த  இல்லத்தை நடத்தி வருகின்றனர்.

ஊர் மக்கள் தரும் பழைய துணி, விழா விசேஷங்களில் மிச்சமாகும் உணவு மற்றும் ஊர் மக்கள் தரும் சிறு சிறு உதவிகளாலே இந்த ஆசிரமம் நடத்தப்பட்டு வருகிறது.

வாடகை இடம்.
ஆதரவற்றோர் இல்லம் .
பல இன்னல்களைக் கடந்து தான் தினமும் இந்த காப்பகத்தின் பொழுது விடிகிறது..

அரசும் கண்டு கொள்ளவில்லை வெளி நாட்டினர் உதவியும் இல்லை. அவர்கள் வயிறார உணவருந்தி கவலையற்று உறங்கிய நாட்களே அரிதாம்.

திருச்சி மற்றும் சுற்றியுள்ள மக்களே,வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களே நம் மக்கள், நம் சொந்தம் பசியோடு ஆதரவற்று வாழ்கிறது. உங்களிடம் உதவிக்கரம் கேட்கிறது.

நம்மால்  முடிந்த அளவு பண உதவி மற்றும் பயன்படுத்தாது போன பழைய துணிகள், உங்கள் வீட்டின் விசேசங்களில் மீந்து போகும் உணவு மற்றும் பிறந்த நாள் மற்றும் நல்ல நிகழ்வு நடக்கும் போதும் இந்த ஆசிரமத்திற்கு ஏதாவது தந்து உதவுங்கள்.

வங்கி மூலம் உதவிட

பஞ்சாப் நேஷனல் வங்கி

பெயர்: கிருஷ் காக்கும் கரங்கள்

கணக்கு எண்: 1088000106082471

IIFSCode: PUNB0108800

கிளை: செத்துரபட்டி

திருச்சி.

இடம்

முகவரி

கிருஷ் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

அரசு பதிவு எண் : 24/014,

சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,

கண் தீனதயாளன் நகர் ,

K. கள்ளிக்குடி பஞ்சாயத்து,

மணிகண்டம் ஒன்றியம் .

திருச்சி -12.

Visitors Counter

632745
TodayToday1677
YesterdayYesterday2892
This_WeekThis_Week12927
This_MonthThis_Month67177
All_DaysAll_Days632745
JoomShaper