மரம் நடுதல்

மரத்தின் அவசியம்:


மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம்.
இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.
"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை.
இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.
சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! 'மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலை' என்ற வாசகம் நாம் அறிந்ததே அல்லவா! ஆம், மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. 'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும்.

எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!

மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. மேலும் கப்பல் கட்டுவதற்கும், மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்றன.

இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.. இவை நம் நாட்டின் செல்வங்கள். அக்காலத்தில் தாத்தா மரம் நட்டால் பேரன் பயனடைவான். இக்காலத்தில் மரத்தினை வைத்தவனே பயனையும் துய்க்க ஆசைப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை.

விஞ்ஞானத்தினால் முடியாதது என்ன? செயற்கை உரங்களைச் சேர்த்து உடன் பயனெய்த வழிவகை செய்கிறோம். ஆனால் அதன் பயனும் நமக்கு குறைந்த அளவிலேயே நன்மை தருகின்றது என்பது வெள்ளிடை மலை அல்லவா? ஏன் இந்த அவசர கதி? மனிதனின் பொறுமை என்னவாயிற்று? நிதானம் எங்கே போயிற்று? நிதானம் பிரதானம் அல்லவா! எனவே எல்லோரும் இதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கையின் வழியில் செல்வோம்! மரங்களையும், பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம்! பயன் பெறுவோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்!!
கரியமிலவாயு
--------------------

செடிகள் வளர்ப்பதற்கு பெரிய இடம் தேவையில்லை.உபயோகமற்ற சின்னச்சின்ன பாத்திரங்களில் செடி வளர்க்க மன அழுத்தம் மறையும்.நம் மனது எப்போதும் ஈரமாக,கோபமற்று குளுமையாக இருக்கும்.அதோடு நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது.

குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும்.அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத்தேவையான நிழல்,குளுமை கிடைப்பதோடு,ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொஞ்சம் நேசம்,கொஞ்சம் மெனக்கெடல்,கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம்.உடலுக்கும் பயிற்சி.

அழகுக்கு அழகு.குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.(நமக்கும் தான்)மனமிருந்தால் மார்க்கமுண்டு.

உபயோகித்துத் தூக்கி எறியும் பெரிய அளவு கோப்பைகளில்,குளிர்பானப்பாட்டில்களில்,எண்ணெய்க் கொள்கலன் களில் தற்போது செடி வளர்க்கிறார்கள்.உங்களின் சாளரங்களும் பசுமையால் நிறைய செடி வளருங்கள்.குருவிகள்,காக்கைகளையும் நண்பர்களாக்க வேண்டுமா? மரம் வளருங்கள்.

1990ம் வருடம் கிட்டத்தட்ட 80 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி, 20 வருடத்தில் 130 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாகிவிட்டது.காடுகளை அழித்து வெற்று நிலங்களை அதிகமாக்கி விட்டோம்.

காடுகளை அழித்தலாலும்,தங்கம்,கனிமம்,நிலக்கரிச்சுரங்கம் தோண்டுவதாலும்,மற்றும் முறையற்ற வேளாண்மையாலும் தான் வெற்று நிலம் பெருகிவிட்டது என்கிறார்கள்.

நண்பர்களே! பூமியை அகழ்பவர்கள் அகழ்ந்து காயப்படுத்தட்டும். அவர்களைத் திருத்த நாம் யார்? ஆனால் நாம் மரம் வளர்ப்போம்.நமது ஆரோக்கியம் காப்போம்.

வங்கி மூலம் உதவிட

பஞ்சாப் நேஷனல் வங்கி

பெயர்: கிருஷ் காக்கும் கரங்கள்

கணக்கு எண்: 1088000106082471

IIFSCode: PUNB0108800

கிளை: செத்துரபட்டி

திருச்சி.

இடம்

முகவரி

கிருஷ் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

அரசு பதிவு எண் : 24/014,

சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,

கண் தீனதயாளன் நகர் ,

K. கள்ளிக்குடி பஞ்சாயத்து,

மணிகண்டம் ஒன்றியம் .

திருச்சி -12.

Visitors Counter

632750
TodayToday1682
YesterdayYesterday2892
This_WeekThis_Week12932
This_MonthThis_Month67182
All_DaysAll_Days632750
JoomShaper