விழிப்புணர்வு

இரத்த தானம் செய்யுங்கள்!
வாழ்க்கை பரிசாகத் தாருங்கள்!
BLOOD DONOR IS A LIFE SAVER

 • ஆறிலும் வாழ்வு ! நூறிலும் வாழ்வு ! எது வாழ்க்கை?
  உங்களுக்காக வாழ்வது அது வாழ்க்கை கடன்
  பிறர்க்கு வாழ்வு கொடுப்பது வாழ்க்கைப் பரிசு.
 • அன்னதானம் பிறரின் பசி தீர உணவளிப்பது
  உடல் தானம் பிறர் வாழ உறுப்புகளைத் தருவது
  இரத்தத் தானம் பிறர்க்கு புது வாழ்க்கைத் தருவது.
 • விண்ணிலிருந்து வரும் குருதி மழையாக மண்ணைக் காக்கும்
  பசுவிலிருந்து கிடைக்கும் வெண்குருதி பாலாக ஆரோக்கியம் காக்கும்
  நம்மிலிருந்து கிடைக்கும் செங்குருதி பிறரின் வாழ்க்கைக் காக்கும்.
 • சில நிலத்தில் தான் எடுக்க எடுக்க தண்ணீர் ஊற்றாய் சுரக்கும்
  வேறு வேறு சாதி மத இன மக்களுக்குள் ஒரே சிவப்புநிற ஊற்று
  நாம் கொடுக்க கொடுக்க தானாக வளரும் இரத்த ஊற்று
 • தந்தையின் இழப்பை தாய் சரி செய்துவிடலாம்
  பணத்தின் இழப்பை மற்ற செல்வங்கள் ஈடு செய்யலாம்
  இரத்தத்தின் இழப்பையை இரத்தம் மட்டுமே ஈடு செய்ய முடியும்!
 • தரையிலும் தண்ணீரில் செல்லும் ஊர்திகளை தந்தான்
  வானத்திலும் விண்ணிலும் பறக்கும் ராக்கெட்டுகளை விட்டான்
  மனித உயிரை காக்கும் இரத்தம் தயாரிக்க இன்னும் முடியவில்லை?!
 • ஒருவரின் இரத்தம் பிறர்க்கு கொடுப்பது இரத்ததானமாம்.
  ஒருவரின் உடலில் சுமார் அரை லிட்டர் இரத்தம் இருக்குமாம்
  ஒருவர் ஒருமுறை கால் லிட்டர் தானமாகக் கொடுக்கலாமாம்.
 • இருவாரத்தில் மீண்டும் புதிதாக சுரந்து விடுமாம்
  சாதாரணமாக உண்ணும் உணவே போதுமானதாம்
  மூன்றுமாதமொருமுறை இரத்த தானம் தரலாமாம்!
 • நம் இரத்த செல்களின் ஆயுள் மூன்றே மாதமே அதன் பின்
  தானாக அழிந்து கழிவாக உடலிருந்து வெளியேறுமே
  தானாக அழிவதை தானமாக கொடுத்தால் உயிர்கள் காக்கப்படுமே.
 • இரத்ததானம் இருதயத்திற்கு பலம் தந்திடுமே
  இதனால் உடல் பாதிப்பு பலவீனம் பக்கவிளைவு ஏற்படாதே
  வீண் வதந்தி, மூட நம்பிக்கை இன்றோடு தொலைத்திடுவோமே
 • வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் பசுமை காக்க
  ஆண்டிற்கு ஒரு முறையாவது இரத்த தானம் தருவோம் உயிர் காக்க
  என்றும் இதுபோல் இரத்ததானம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம்.

வங்கி மூலம் உதவிட

பஞ்சாப் நேஷனல் வங்கி

பெயர்: கிருஷ் காக்கும் கரங்கள்

கணக்கு எண்: 1088000106082471

IIFSCode: PUNB0108800

கிளை: செத்துரபட்டி

திருச்சி.

இடம்

முகவரி

கிருஷ் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

அரசு பதிவு எண் : 24/014,

சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,

கண் தீனதயாளன் நகர் ,

K. கள்ளிக்குடி பஞ்சாயத்து,

மணிகண்டம் ஒன்றியம் .

திருச்சி -12.

Visitors Counter

632748
TodayToday1680
YesterdayYesterday2892
This_WeekThis_Week12930
This_MonthThis_Month67180
All_DaysAll_Days632748
JoomShaper