இரத்த சேவைகள்

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ, சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல, இன்று நம்மில் 20-30% மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினை செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

 • இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
 • இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 • இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
 • ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
 • இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்
  எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
 • கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
  கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
  இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது
  இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண்களின் தேவையான தகுதிகள்:

 • மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்
 • தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
 • இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
  மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது.
 • மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.
 • புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது.
 • இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப் பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்றபாதிப்புகளை உருவாக்கும். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.
 • இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.
 • இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
 • இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.
 • இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியின் செயல்பாடுகள்:

 • ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4½ (நான்கரை) முதல் 5½ (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது.
 • இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கி களில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
 • சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது.
  இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.
 • ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாது காக்கப்படுகின்றது.
  தூய இரத்தம் (Whole blood)
  35 நாட்கள்
  இரத்தச் சிகப்பணு (Packed Red cells)
  42 நாட்கள்
  இரத்தத் தட்டுக்கள் (Platelets)
  5 நாட்கள்
  பிளாஸ்மா (Plasma)
  1 வருடம்
 • இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றது.
 • இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்கு பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:

 • இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
 • இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
 • தற்போதைய ஆய்வு களில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
 • ஹிமோகுளோபின் (Heart attack) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
 • இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
 • இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.
 • மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

 • இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறர்க்கும் அளிக்கின்றது.
 • இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
 • பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. ஆகவே தங்களால் இயன்றஅளவு பிறர்க்கு தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்!

வங்கி மூலம் உதவிட

பஞ்சாப் நேஷனல் வங்கி

பெயர்: கிருஷ் காக்கும் கரங்கள்

கணக்கு எண்: 1088000106082471

IIFSCode: PUNB0108800

கிளை: செத்துரபட்டி

திருச்சி.

இடம்

முகவரி

கிருஷ் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

அரசு பதிவு எண் : 24/014,

சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,

கண் தீனதயாளன் நகர் ,

K. கள்ளிக்குடி பஞ்சாயத்து,

மணிகண்டம் ஒன்றியம் .

திருச்சி -12.

Visitors Counter

632756
TodayToday1688
YesterdayYesterday2892
This_WeekThis_Week12938
This_MonthThis_Month67188
All_DaysAll_Days632756
JoomShaper